விளக்கவுரைகள்

நிர்வாணஷட்கம் - வரிகள் மற்றும் விளக்கம் | Nirvana Shatakam Lyrics in Tamil

ஆதிசங்கரர் அருளிய 'நிர்வாணஷட்கம்' ஸ்லோகங்களின் முழுமையான தமிழ் வரிகள் மற்றும் தெளிவான மெய்ஞான விளக்கம் இங்கே.

banner
Article | 24-Mar-2026

நிர்வாண ஷட்கம் (Nirvana Shatakam)

ஆதிசங்கரர் அருளிய இந்த உன்னதமான ஸ்லோகங்கள் "நான் யார்?" என்ற தேடலுக்கு விடையாக அமைகின்றன. இதன் சமஸ்கிருத வரிகள் மற்றும் அதன் துல்லியமான தமிழ் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மனோ புத்தி அஹங்கார சித்தானி நாஹம்

ந ச ஷ்ரோத்ரஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே

ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயுஹு

சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

மனமோ, புத்தியோ, அகங்காரமோ, உயிரின் பிரதிபலிப்போ நானல்ல.

ஐந்து ஞானேந்திரியங்களான (கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல்) இவையும் நானல்ல.

பஞ்சபூதங்களாகிய (ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி) இவையும் நானல்ல.

விழிப்புணர்வு பேரானந்தத்தின் உருவேயான சிவனே நான்! சிவனே நான்!

ந ச ப்ராண சங்யோ ந வை பஞ்ச வாயுஹு

ந வா சப்த தாதுர் ந வா பஞ்ச கோஷ:

ந வாக் பாணி-பாதம் ந சோபஸ்த்த பாயு:

சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

மகா பிராணனும் நானல்ல பஞ்ச வாயுவான (பிராணன், அபானன், சமானன், உதானன் மற்றும் வியானன்) இவையும் நானல்ல. உடலின் மூலப்பொருளான ஏழு தாதுவும் நானல்ல ஐந்து கோஷங்களும் நானல்ல.

ஐந்து கர்மேந்திரியங்களான (வாக்கு, கைகள், கால்கள், குதம் மற்றும் பிறப்புறுப்பு) இவையும் நானல்ல.

விழிப்புணர்வு பேரானந்தத்தின் உருவேயான சிவனே நான்! சிவனே நான்!

ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ

ந மே வை மதோ நைவ மாத் சர்ய பாவஹ

ந தர்மோ ந ச்சார்தோ ந காமோ ந மோக்ஷஹ

சிதாநந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

எனக்கு எதன்மீதும் விருப்பமோ வெறுப்போ இல்லை பேராசையும்,

மோகமும் இல்லை. நான் என்ற அகந்தையும், பொறாமையும் இல்லை.

எனக்கு புண்ணியத்தையோ, பணத்தையோ, சுகங்களையோ, மோட்சத்தையோ அடைய வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லை.

விழிப்புணர்வு பேரானந்தத்தின் உருவேயான சிவனே நான்! சிவனே நான்!

ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்

ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞஹ

அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா

சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

எனக்கு புண்ணியமும் இல்லை பாவமும் இல்லை சுகமும் இல்லை துக்கமும் இல்லை.

மந்திரமோ, ஆலயமோ, சாஸ்திரமோ, யாகமோ எனக்கு தேவையில்லை.

உணவும் நான் அல்ல உண்பவன் நான் அல்ல.

விழிப்புணர்வு பேரானந்தத்தின் உருவேயான சிவனே நான்! சிவனே நான்!

ந மே ம்ருத்யு ஷங்கா ந மேஜாதி பேதஹ

பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்மஹ

ந பன்துர் ந மித்ரம் குரூர் நைவ சிஷ்யஹ

சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

எனக்கு மரணத்தின் மீது பயமும் இல்லை பிறப்பின் அடிப்படையிலான ஜாதி பேதமும் இல்லை.

தாய்யும் இல்லை தந்தையும் இல்லை ஏன் எனக்கு பிறப்பே இல்லை.

எனக்கு சொந்தமும் இல்லை, நண்பனும் இல்லை, குருவும் இல்லை, சிஷ்யனும் இல்லை.

விழிப்புணர்வு பேரானந்தத்தின் உருவேயான சிவனே நான்! சிவனே நான்!

அஹம் நிர்விகல்போ நிராகாரோ ரூபோ

விபுத் வாட்ச்ச ஸர்வத்ர ஸர்வேந்த்ரியானாம்

ந ச்ச சங்கதம் நைவ முக்திர் ந மேயஹ

சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

நான் வேறுபாடற்றவன் அனைத்து உயிர்களுக்குள்ளும் உயிராய் இருப்பவன் உருவமற்றவன்.

எங்கும் நிறைந்திருப்பவன் அனைத்து புலன்களுக்கும் பின்னால் இருப்பவன்.

எனக்கு பற்றோ பற்றின்மையோ இல்லை நான் சிறை படவும் இல்லை விடுதலையாகவும் இல்லை.

விழிப்புணர்வு பேரானந்தத்தின் உருவேயான சிவனே நான்! சிவனே நான்!