அன்னதானம்

அன்னதானம் -கருணையின் உயர்ந்த வடிவம்

குரு தில்லை அழகன்

banner
Article | 15-Aug-2026

அன்னதானம் என்பது எல்லா தர்மங்களிலும் உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது. "பசியை போக்குவது பரம புண்ணியம்  என்று முன்னோர் கூறியதன் ஆழமான அர்த்தத்தை உணர்த்தும் அரிய ஆன்மீக வழி இதுவாகும். மனித வாழ்வின் அடிப்படை தேவையான உணவை பகிர்ந்து கொடுப்பது, வெறும் உதவி அல்ல அது பரம கருணையின் வெளிப்பாடு.

குருவின் உபதேசப்படி, பசியால் வாடும் ஒருவருக்கு அளிக்கப்படும் ஒரு கைப்பிடி உணவு கூட இறைவனுக்கே சமர்ப்பிக்கப்படும் புனித அர்ப்பணிப்பாகும். மனிதனின் உடல் உணவால் நிலைத்திருக்கிறது அதே சமயம், அவரது ஆன்மா கருணை மற்றும் அன்பால் உயர்கிறது. 

அந்த அன்பும் கருணையும் வெளிப்படும் மிகச் சிறந்த வழியே அன்னதானம் என்று சிவயோகத்தின் மூலம் வலியுறுத்துகிறார்.

அன்னதானம் செய்ய பெரிய செல்வம் தேவையில்லை; பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை இருந்தால் போதும். அன்புடன் வழங்கப்படும் சிறிய உணவும் அளவற்ற புண்ணியத்தை தரக்கூடியது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தன்னலமின்றி செய்யப்படும் அன்னதானமே உண்மையான தர்மம் என  குரு சிவயோகத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறார்.

இன்றைய காலத்தில் மனிதர்கள் சுயநலத்தில் மூழ்கியிருக்கும் போது, சிவயோகத்தில் உபதேசத்தின் மூலம் அன்னதானம் மனித நேயத்தை மீண்டும் எழுப்பும் ஒளியாக விளங்குகிறது என தெலியவைக்கிரார், இது வெறும் உடல் பசியை போக்கும் செயல் மட்டுமல்ல; மனங்களை இணைக்கும் புனிதப் பாலமாகும். அன்பும் சமத்துவமும் பரவும் ஒரு தெய்வீக செயல் இது. முடிவாக, அன்னதானம் என்பது ஒரு சாதாரண தர்மச் செயல் அல்ல அது ஆன்மீக உயர்வுக்கான ஒரு பாதை. மனமாரச் செய்பவர்களுக்கு இறையருள் என்றும் துணையாக இருந்து, அவர்களின் வாழ்க்கையை அமைதி, ஆனந்தம், நிறைவு ஆகியவற்றால் நிரப்பும்.